Wednesday, 11 May 2011

எனக்கு எனர்ஜி தந்த எனர்ஜி பக்கங்கள் - 1

ஜோ ன்னு பேஞ்ச மழை....ஜில்லுனு அடிச்ச காத்து...ஏன்னா அது மழை சீசன் அப்ப தான் என் சீசன் ஆரம்பிச்சுச்சு....இதுவரைக்கும் வினோத் அண்ணே நம்பர வாங்கி பத்திரமா காண்டாக்டல வைச்சு இருந்த நா....சரி இன்னிக்கு போன் பண்ணுவோமேனு வியாழக்கிழமை டிசம்பர் 2 கால் பண்ணேன்....வினோத் அண்ணே சொல்லுங்க பாஸ்னு நல்லா பேசினாங்க.....நானும் அண்ணே அடுத்த வார எனர்ஜி பேஜஸ் மேட்டர் டைட்டில் என்னன்னானு கேட்டேன்...இதுல முக்கியமான விஷயம் என்னன்னா நா வினோத்குமார் அண்ணணோட தீவிர ஃபேன்......அதுனால வேற எக்ஸ்ட்ரா பிரஷர்....அந்த அண்ணனும் ஆன்லை எஜுகேஷன் தான் நம்ம எடுத்துகிட்ட டைட்டில்னு சொல்லி எப்படி கேள்வி கேக்கனும்....எந்த மாதிரி விஷயம் நமக்கு தேவைபடுதுன்னு எல்லாமே சொல்லி இருந்தாங்க.....

 
இதுல ஸ்பேஷல் என்னன்னா மறுநாள் எனக்கு யுனிவர்சிட்டி எக்ஸாம்......அந்த சமயத்துல என் மனசுல இந்த அஸைன்மண்ட்ட மட்டும் முடிக்கலான நம்ம பேர ஆனந்த விகடன்ல நினைச்சு கூட பாக்க முடியாதுனு மட்டும் தான் ஓடிகிட்டு இருந்துச்சு...உடனே பசங்களுக்கு போன் அடிச்சு ஆன்லைன் எஜுகேஷன் இன்ஸ்டிடுயூட் எங்க இருக்குனு விசாரிச்சு....ஒரு வழியா ரிலையன்ஸ் வேர்ல்டுல இருக்கறது தெரிஞ்சு அங்க உள்ள மேனஜர் கிட்ட பேசிட்டு .....ஈவினிங் வந்து போட்டோ எடுத்துக்குறேன் சார்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்....வெளில வந்த உடன சிவபாலனுக்கு போன் பண்ணேன்.....மாப்ல காலேஜ்ல இருக்கேண்டா...இப்ப கிளம்பினாலும் 5 மணிக்கெல்லாம் அங்க வந்துடுவேன்னு சொன்னான்...சரிடா வானு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.......

அது தான் அஸைன்மெண்ட் முடிஞ்சுருச்சேனு பாத்தா அந்த ரிலையன்ஸ் மேனேஜர் போன் பண்ணி தம்பி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நா என் ஹெட் ஆபீஸ்ல கேட்டு சொல்லுறேன்....அப்பறம் போடலாம்னு சொல்லிட்டான்....சரி சார்...போட்டோ மட்டுமாவது எடுத்துக்குறொம் வேனும்னா படத்தில் இருப்பவர்கள் மாடல்களேனாவது போட்டுகளாம்னு கேட்டோம்...ஒரு வழியா அதுக்கு ஒத்துகிட்டார் அந்த மேணேஜர்.....
நல்லவேளை அந்த மேனஜிருக்குஹெட் அபீஸ்ல இருந்து கொஞ்ச நேரத்துல எல்லாம் மெயில் வந்துடுச்சு...ஓகேன்னு......நானும் சிவபாலனும் போட்டோ எடுத்துட்டு நக் இருந்து கிளம்பிட்டோம்...அது தான் காலைலயே மேட்டர் எடுத்தாச்சே அப்பறம் என்ன......

இதுக்க அப்புறம் தான் என்னோட ரியல் பிரஷர் ஆரம்பமானது...இத்தன நாள் சக்தி விகடன்ல கோவில் குளம் பரிகாரம்னு எழுதிகிட்டு இருந்தோம்....இப்ப என்ன பண்ண போறோம்னு தெரிய;லயேங்குற பயம்...எங்க வினோத் அண்ணே நம்மல பத்தி எதாவது நெனச்சுரு வாங்களோங்குற பயம்னு...பயம் மட்டுமே இருந்துச்சு கம்பூட்டர் முன்னாடி உக்காந்து....டைப் பண்ண ஆரம்பிச்சப்ப என் மனசுல ஓடினது எல்லாம் ஒரே விஷயம் தான்...இதே வினோத் அண்ணே மீட்டிங்ல சொன்ன எண்ற்றி லிஸ்ட்,,,எக்ஸிட் லிஸ்ட்டு தான்...எண்ட்ரி லிஸ்ட்ல இருந்த என் பயம் எக்ஸிட் லிஸ்ட நோக்கி போனத என்னால உணர முடிந்தது.....
"முன்பெல்லாம் படிச்சத விரல் நுனில வைச்சு இருக்கேன்னு சொல்லுவாங்க ஆனா இப்ப விரல் நுனில தான் படிக்கவே ஆரம்பிக்குறாங்கனு" ஆரம்பிச்சு......ஒவ்வோரு விஷயத்துலயும் கவனம் செலுத்தி அந்த அஸைன்மெண்ட்ட எழுதினேன் காரணம் புக்குல வரணுங்கிறதுக்காக அல்ல....வினோத் அண்ணேகிட்ட இருந்து நல்ல கமெண்ட் வரணும்கிறதுக்காக........ரெண்டு மணி நேர டைப்பிங் முடிஞ்சு மெயில் அனுப்பிட்டு ஹாஸ்டலுக்கு போக மணி 10 ஆகிடுச்சு.....மறுநாள் எக்ஸாம் மதியம்கிறதுனால காலில அவசரம் அவசரமா படிச்சு பரிச்ச எழுதி ஏதோ ஒரு வழியா 87/100 வாங்கிட்டேன்......


எக்ஸாம் ஹால்ல இருந்து வெளில வர்ரேன் வினோத் அண்ணண்ட்ட இருந்து கால் வருது....பாஸ் அந்த மேனஜர் பேரு என்னனு கேட்டாங்க நானும் சொன்னேன்...ஓகே பாஸ்னு வைச்சுட்டாங்க....நானும் என்னடா நல்ல இருக்கு நல்லா இல்லனு ஓன்னுமே சொல்லாம வைச்சுட்டரேனு நினைச்சுகிட்டு இருந்தேன்......இதுக்கு இடைல திருச்சி மீட்டிங் சரினு அட்டன் பண்ண போனா அங்க ஒரு நம்ம ஸ்டுடண்ட் குரூப் என்ன பாஸ் கலக்குறீங்க ஆனந்த விகடனுக்கு எல்லாம் அஸைன்மெண்ட் பண்ணுறீங்கனு என்ன கலாய்க்க(பெயர் வெளியிட விரும்பவில்லை).....நானும் பயத்துலயே இருந்தேன்....


அது வரைக்கும் வியாழக்கிழமை தான் ஆனந்த விகடன்ல மேட்டர் வருமா?வராதானு தெரியும்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்......
செவ்வாய்கிழமை மதியம் பிரவுஸிங் செண்டருல பேஸ்புக்குல இண்ட் ரஸ்டிங்கா சாட்டிங் ஓடிகிட்டு இருந்துச்சு........ஒரு போன் கால் பாத்தா வினோத் அண்ணே....பாஸ் போன அஸைன்மெண்ட் நல்லா பண்ணீங்க...மேட்டர்ல எடிட்டிங் பண்ண வேண்டிய அவசியமே இல்ல இந்த அளவுக்கு தெளிவா இருந்துச்சு சொன்னாங்க...எனக்கு எப்படி ரீயாக்ட் பண்ணுறதுன்னே தெரியல.....அடுத்த வார அஸைன்மெண்ட் பண்ணுரீங்களா பாஸ்னு அவர் கேட்டவொடன எனக்கு மனசுல கண்ண ரெண்டாவது லட்டு தின்ன ஆசையானு ஓட ஆரம்பிச்சுருச்சு........ஓகேனானு சொல்லிட்டு எல்லா விவரத்தையும் கேட்டுகிட்டேன்.......(அந்த அஸைமண்ட் என்னனு அடுத்த போஸ்ட்ல தான் சொல்லுவேண்)

 
அந்த வாரம் என் ப்ராஜக்ட் விஷயமா சென்னை போக வேண்டி இருந்தது....சரி ஆபீஸ் பக்கம் போய் வினோத் அண்ணன் கிட்ட நான் தான் ஸ்ரீராம்னு அறிமுகம் பண்ணிக்கலாம்னு கிளம்பி போணேண்.....வினோத் அண்ணனுக்கு போன் பண்ணி அண்ணே நா இப்ப சென்னைல இருக்கேன்......உங்கள பாக ஆபீஸ் வரலாமானு கேட்டேன்...ஓகே பாஸ் வாங்கனு சொன்னாங்க....சரினு 20 நிமிஷத்துல ஆபீஸ்க்கு போய்ட்டேன்.....அங்க போனா செக்யூரிட்டி என்ன பாத்து யாருனு கேட்டரு...அப்ப என் மைண்டுல ஆனந்த விகடன் ஆபிஸ்ல என்ன பாத்து யாருனுகேட்ட முதல் ஆள் நீங்க தங்கன்னானு சொல்லனும்னு நெனச்சேன்....ஆனா அந்த அளவுக்கு வொர்த் இல்லங்கிறதால....ஸ்டண்ட் ரிப்போர்ட்டர்னு சொல்லிட்டு உள்ள போய் வினோத் அண்ணன பாத்தேன்...அவங்க வா வெளில போய் டீ சாப்பிட்டுகிட்டே பேசல்லம்னு ஆபீஸ் பக்கத்துல உள்ள டீக்கடைக்கு கூட்டிட்டு போனாங்க...அங்ககிட்ட தட்ட ஒரு ஒரு மணி நெரம் பேசி இருப்போம்....அந்த ஒரு மணி நேரம் தான் என்ன ஒரு பத்திரிக்கையாளனாஅ மாத்தினுச்சு...அப்ப அங்க வந்த மாரியப்பண் அண்ணே போட்டோகிராபர் நல்லா பேசினாங்க....நிரையா அஸைன்மெண்ட் பண்ணுன்னு சொன்னாங்க.......
ஒருவழியா வியாழக்கிழமை புக்கு கைக்கு வந்துச்சு கை தானா எனர்ஜி பக்கங்கள நோக்கி போச்சு......அங்க என் பேரும் வினோத் அண்னன் பேரும் தான் இருந்துச்சு.....அப்ப ஏற்பட்ட சந்தோஷம் தான் என்ன ஆனந்த விகடன்ல ஒரு மூலைல பெற்ற இடத்தை தக்க வைக்க உதவியா இருந்துச்சு.......நா எழுதின மேட்டர் கொஞ்சம் கூட மாறாம இருந்தது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி.......இது தான் விகடன்ல எனக்கு கிடைச்ச டர்னிங் பாயிண்ட்......இனி தான் ஆரம்பம்,,,,,,
இதுல வேற என் பேர .ஸ்ரீராம்+விகடன்னு கூகுள்ல சர்ச் பண்ணா இந்த அஸைண்மெண்ட் தான் வந்து நிக்குது நீங்களே பாருங்களேண்......
 
 
 

 
-
எனர்ஜி தொடரும்

மோட்டார் விகடன்-ரேஸ் எப்படி.?

எழுத்து-எழுத்தோடு அமைந்த வாழ்க்கை. இதுதான் சில வருசங்களுக்கு முன்னால என் கனவு. நம்ம பேரு ஏதாவது பத்திரிக்கையில ஏதாவது மூலையில வந்திடாதானு ஏங்கிட்டு இருந்தன். அதுக்கான எந்த முயற்சியிலும் நான் ஈடுபடல என்பது இன்னொரு விசயம். முதல் முறையா விகடனுக்கு முயற்சி செஞ்சு செலக்ட் ஆனேன்(தற்பெருமை பேசத டா.!!)

நண்பர், தோழர், சகோதரர் ஸ்ரீராம்-இன் ஆலோசனைபடி நாம நம்ம அனுபவங்களை இங்கே பகிரலாம்லு சொல்லிட்டார். விகடன் நம்மை அடித்து துரத்தினாலும் நண்பர் ஸ்ரீ விடுவதா இல்லை போல. அப்படி என்ன இந்த ராமநாதன் சந்திச்சான். அதுல இவன் அனுபவம் என்ன.? அதனால என்ன ஆச்சு இவனுக்கு.? சொல்றன்.. சொல்றன்.

ஆர்வக்கோளாறுல எடுத்த உடனே கோதாவுல குதிச்சு இப்ப வரைக்கும் வெத்துவேட்டாவே சுத்துறது யார்.? சென்னை ஆபிஸ்ல யார கேட்டாலும் பட்டுனு சொல்ற பெயர் ராமநாதன்(புகழாதீங்கப்பா.!!) ஆனா எனக்கும் மோட்டார் விகடனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.!! மோட்டார்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் மோட்டார் விகடன் ஸ்டூடண்ட் ஹெட் பாலமுருகன் என்னை சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் ரேஸ் ட்ராக்கில் நடக்கும் சர்வதேச ரேஸ்க்கு செல்ல சொல்லியிருந்தார். அது மோட்டார் விகடன் ஸ்பெஷல் அண்ணன் சார்லஸ் மூலம் எனக்கு கிடைத்தது. சர்வதேச ரேஸ்க்கு நம்ம ஐடி கார்டை வைத்துக்கொண்டு செல்வது கடினம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். சாதாரணமாக தமிழ் பத்திரிக்கை என்றாலே சர்வதேச ரேஸ்களில் ஒரு மாதிரி தான் பாப்பாய்ங்க. அதுக்கெல்லாம் கவலையே படகூடாது.

முதல்ல இந்த வொர்க்கை நமக்கு ஏற்படுத்து கொடுத்த அண்ணன் சார்லஸ்க்கு போன் போட்டு என்ன செய்யவேண்டும் என்பதை கேட்டுகொண்டேன். அவரிடமிருந்து சம்பந்தபட்ட இடத்தில் நமக்கு வழிகாட்டபோகும் நபரின் போன் நம்பரையும் கேட்டு வாங்கிகொண்டேன். ரேஸ் ஆரம்பிக்கபோகும் மெட்ராஸ் ரேஸ் க்ளப் ட்ராக்கின் வாசலிலே மடக்கிட்டாங்க. சர்வதேச ரேஸில் மீடியா பர்சனாகவோ செல்லும் போது அவருக்கென தனியாக கொடுக்கப்படும் கார்டுகளை பெற்றிருக்கவேண்டும். ஆனால் எனக்கு இந்த ஆர்டிக்கல் பத்தி நியூஸ் தெரிந்தது முந்தைய நாளின் இரவு தான் என்பதால் என்னால் கார்டு வாங்க முடியவில்லை. கூட வந்த சீனியர் போட்டாகிராபர் நாகமணியும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். எங்களை உள்ளே விட மறுத்துவிட்டனர்.


உடனே, அங்கே பொறுப்பாளருக்கு போன் அடித்து விசயத்தை சொன்னேன். அவர் அங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன் என்றார். ஒன்று நாம் எப்போதும் புரிந்துகொள்ளவேண்டியது நமக்கு வேலை முடியவேண்டும் என்பது தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரேஸ் தொடங்க இருக்க அங்கேயே காத்திருந்தால் எங்கிருந்து நாம் ரேஸை பற்றி விவரம் அறிய முடியும்.? அதனால் அவருக்கு போன் செய்து எங்களது நிலையை சற்று கடுமையாக விளக்கினேன். அங்கே எங்களை உள்ளே விட மறுத்த காவலாளியிடம் போனை கொடுத்து எங்களுக்கு விசிட்டர் கார்டு கொடுத்து உள்ளே அனுப்பிட்டனர். ஆனால் அதுமட்டும் போதாதே.!! அது இருந்தால் சற்று தொலைவில் இருந்து தான் பார்க்க முடியும். உள்ளே சென்ற நாங்கள் அவருக்காக காத்திருந்தால் ரேஸ் மிஸ் ஆகிவிடும் என்று அந்த ரேஸை நடத்தும் எம்.ஆர்.எஃப்., நிறுவன ஆட்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே புகுந்தோம்(இந்த மாதிரி அப்பாடக்கரு வேலையெல்லாம் செஞ்சது நானே.!!)

ஆனால் முதல் ரவுண்டு முடிந்ததும் அவர் வந்துவிட்டார். உடனே ப்ரஸ் ரூமில் புகுந்து ப்ரஸ் ஐடி கேட்டோம். போட்டோ எடுக்க கண்டிப்பாக ஒரு 'கோட்' கொடுப்பார்கள். அதை அணிந்தால் தான் ட்ராக்கில் இறங்கி போட்டோ எடுக்கவேண்டும். சர்வதேச ரேஸ் என்பதால் அதற்கான 'டெபாசிட்'டாக 500 ரூபாய் கேட்டார்கள். ஆனால் எங்கள் இருவரிடம் சேர்த்தே 400 ரூபாய் தான் இருந்தது. எங்கள் நிலையை விளக்கிய பின்னர் அவர் தான் போன்லயே நமக்கு ரொம்ப பழக்கமானவரா ஆயிட்டாரே, அதுமட்டுமில்லாம சார்லஸ் அண்ணன் அங்க எல்லாம் பயங்கர பேமஸ். அதனால அவரே எங்களுக்கு காசு கொடுத்திட்டார்.

பிறகு போய் ரேஸை கவனிக்க தொடங்கினேன். ஒண்ணும் புரியல.! யார் பெயரும் வாயில நுழையல. அடிச்சு புடிச்சு ப்ரஸ் ரூம் போய் ரேஸ் டேடா கேட்டு வாங்கினேன். யார் யாரெல்லாம் எந்தந்த லேப்பில் முன்னர் வருகிறார் என்பதை கவனித்து வந்தேன். பின்னர் வீட்டுக்கு போய் சிஸ்டம் முன்னாடி உக்காந்து நான் கவனித்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ஆர்டிக்கல் எழுதி பாலமுருகன் சார்க்கு அனுப்பினேன். அடுத்த நாள் காலையில அவருகிட்ட இருந்து போன். சிரிச்சுகிட்டே பேசினார். ரொம்ப சூப்பரா எழுதிட்டோம் போலனு நானும் என்ன சார்னு கேட்டேன். உன்னுடைய ஆர்டிக்கல் வச்சு ஒண்ணுமே ஒப்பேத்த முடியலப்பானு சொல்லிட்டு திரும்பவும் சிரிச்சார். ஆபிஸ்க்கு வர சொன்னார். கொஞ்ச நாள் கழித்து போனேன். ஆர்டிக்கல் ஒரு மார்கமா இருந்தது. என்னது இது நாம எழுதின மாதிரியே தெரியலையேனு என்னுடைய அர்டிக்கலையும், அதையும் ஒப்புமை படுத்தி பாத்து ஒரு சில விசயங்கள் கத்துகிட்டேன். அதற்கு பிறகு இரண்டு ரேஸ், இரண்டு ரேஸ் கோச்சிங் என இருங்காட்டுகோட்டை நம்ம பக்கமாயிடுச்சு. ரேஸ் ஆர்டிக்கலுக்கு என்ன செய்யவேண்டும்.?

** ஒரு ரேஸ்க்கு போகும் போது அது எந்த மாதிரி ரேஸ், அதற்கு நாம் கையில் என்ன வைத்திருக்கவேண்டும் என்பதை அங்கே சம்பந்தபட்டவரிடமும், நம்மை அனுப்பியவரிடமும் தெளிவாக கேட்டு வாங்கிடவேண்டும்.!

** பிறகு நாம் போக போகும் ரேஸின் முந்தைய விவரங்களை கேட்டோ அல்லலது இணையத்தின் மூலமோ அறிந்திருக்க வேண்டும்.

**பங்கேற்பாளர்களை பற்றியும் அவர்களது விவரங்களையும் சேகரித்து அறிய வேண்டும்.

**ஆர்டிக்கல் எழுதும் போது் ரேஸின் முந்தைய, அன்றைய அதன் பின்னர் நிலவரங்களையும் ஒப்புமை படுத்தி எழுதவேண்டும்.

**தெளிவில்லாத விசயங்களை எழுத கூடாது.

இன்னும் நிறைய விசயங்கள் இருக்கு. பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன். மற்ற நண்பர்களின் அனுபவத்தையும் கேட்க ஆவலோடு இருக்கிறேன். விகடனுக்கு பெருத்த நன்றிகள்.! மற்றும் இந்த யோசனையின் அடிப்படையான ஸ்ரீ ஒரு சிறப்பான வேலைபாடை செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும் நன்றி!

நண்பர்கள் இதில் பதிவு போடும் போது லேபிளில் அவரவரது பெயரையே எப்போதும் போடுமாறு கேட்டுகொள்கிறேன்.!!

Friday, 6 May 2011

எழுதி எழுதி வாழ்வோம்


உங்களை உருவாக்கிய எழுத்துக்கள் தான் எங்களை போன்றவரையும் உருவாக்கியது.நமது எழுத்து இந்த சமூகத்தில் எத்தனையோ மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.அதில் நாம் பெற்ற அனுபவம் இன்னும் பலரை இந்த துறையில் நிலைக்க வைக்க வழியாய் அமையும் என்றால் அந்த பெருமை நம் எழுத்துக்களையே சாரும்.நம் அனுபவத்தை எழுத்துக்களாய் இங்கு விதைப்போம்.உங்களுக்கு இந்த பத்திரிக்கை உலகம் தந்த அனுபவங்களை இங்கே பதிவு செய்து செய்யுங்கள்....
நிச்சயம் நாம் எழுதி எழுதி வாழ்வோம்......